இந்தியாவில் சோதனைக்கு தயாராகும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷியா அறிவித்தது.
இந்த நிலையில் ரஷ்யாவில் தயாராகி வரும் ஸ்புட்னிக் தடுப்பூசி உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில் இந்தத் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தடுப்பூசிக்கான சோதனை அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி, கொரோனாவை அழிக்கும் சோதனையில் 92 சதவீதம் வெற்றிகரமாக இருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply