மட்டக்களப்பின் சில பிரதேசங்களில் அமுலாகியுள்ள ஊரடங்கு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

karunakaran

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இன்னும் மூன்று நாட்கள் அவதானித்து மேலும் கொரோனா பரவல் இல்லாவிட்டால் ஊரடங்கினை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார்.

அதேவேளை மூன்று நாட்களின் பின்னர் பரவல் அதிகரித்தால் ஊரடங்கினை நீடிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 76பேர் கொரோனா தொற்று உள்ளவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2378 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா வீதம் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைவிட 2754 குடும்பங்களுக்கு தொழில் பாதிப்புக்கான 5000 ரூபா உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 161 மில்லியன் ரூபா கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply