பிரதமர் மஹிந்தவிற்கு கொரோனா தொற்று? மூடப்படும் அலரிமாளிகை?
பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகை தனிமைப் படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகை இந்த வாரத்தில் மூடப்பட்டிருக்கும் எனவும் மறு அறிவித்தல் வரை பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்கதேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பிரதமரின் அலுவலகம் மூடப்பட்டிருப்பது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை, அப்படி மூடப்படுமாயின் பிரதமர் மஹிந்தவிற்கு கொரோனா உறுதிசெய்யப்படலாம் என அரசியல் ஆய்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது தொடர்பில் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பிரதமருக்கு தொற்று இல்லை அவர் திடகாத்திரமாக இருப்பதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அலரிமாளிகையில் பாதுகாப்பு படையணியில் அமர்த்தப்பட்டுள்ள விஷேடப்படையினர் பலருக்கு தொற்று உருதிபடுத்தியதை அடுத்தே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்ட்டிருக்கலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்லது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply