இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் அரச பயங்கரவாதம்
மஹர சிறையில் இடம்பெற்ற கலவரத்தின்போது அதனைக் கட்டுப்படுத்த கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் எடுத்த முயற்சிகளைப் பார்க்கின்றபோது மீண்டும் அரச பயங்கரவாதம் இலங்கையில் தலைதூக்கிவிட்டதா என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெலிக்கடை சிறையிலிருந்தே மஹர சிறைச்சாலைக்கு கொரோனா வைரஸ் திட்டமிடப்பட்டு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடியபோது எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். கலவரம் குறித்து தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
எமது நாட்டில் 1877ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தில் மூன்று பிரிவுகள் கடந்த சில நாட்களாக மீறப்பட்டுள்ளன.
மஹர சிறைச் சம்பவத்திற்குப் பின்னால் இரத்தத்தை காண்பதற்கு வெறியேற்படும் வில்லைகள் என்று சிலர் தெரிவித்திருந்ததுடன், சர்வதேச அரங்கில் இலங்கையை அகௌரவப்படுத்தும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் அந்தக் கைதிகள் பிசிஆர் பரிசோதனையை நடத்தும்படியே கோரியிருந்தனர். கைதிகளின் சுகாதாரத்திற்குப் பொறுப்பாகவுள்ள மருத்துவர் தான் வெலிக்கடை சிறையிலிருந்து 120 கைதிகளை மஹர சிறைக்கு மாற்றியிருந்தார்.
அவர் வியத்மக என்கிற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அமைப்பில் ஒரு அங்கத்தவர். அதன் காரணமாகவே மஹர சிறையிலும் கொரோனா கொத்தனி ஏற்பட்டது.
எமது நாட்டில் அரச பயங்கரவாதம், கொலைக் கலாசாரத்தை தலைதூக்க நாங்கள் இடமளிக்கமாட்டோம். இரத்தம் காணவும் வில்லை என்று சிலர் கூறுவதை நாங்கள் மறுக்கின்றோம், கண்டிக்கின்றோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply