இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் என்ன?

மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை முடியும் வரை தகனம் செய்ய வேண்டாம் என்று இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

இந்நிலையில், மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்களா? இல்லையா? என பிரேத பரிசோதனை முடிவும் வரை தகனம் செய்ய வேண்டாம் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டத்திற்கும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதல்களுக்கும், அமைதி யின்மைக்கும் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறைச்சாலையில் கூட்ட நெரிசல் , கொ ரோனா தொற்று பரவல் குறித்த பயம் மற்றும் அதற்கு எதிராக மேற் கொண்ட பிரச்சாரம் ஆகிய மூன்று காரணங்களே என அதன் ஆணையாளர் ரமணி முத்தெடுவேகம தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply