கட்டு நாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று முதல் திறப்பு

கட்டு நாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று 5 ஆம் திகதி காலை  மீண்டும் திறக் கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு விமான பயணிக்குப் பார்வையாளர் அரங்கிற்கு ஒரு நபரை மாத்திரம் அழைத்துச் செல்ல முடியும்.

சுகாதார பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த செயற் பாடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்று நிலைமை காரண மாகக் கட்டாய தனிமைப்படுத்தல் செய்முறைக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் விமான நிலையத்தின் வரியற்ற வர்த்தக தொகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்க முடியாமல் போன விமான பயணிகளுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

அதன்படி, தனிமைப்படுத்தல் நிறைவடைந்த நாள் முதல் ஒரு மாதக்காலத்திற்கு விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்குள்ள வரியற்ற விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்கிச் செல்ல வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply