கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கம்
நாளை காலை 05.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை காலை 05 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு மாவட்டத்தின் கொம்பனிதெரு பொலிஸ் பிரிவின் ஹுனுபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60 தோட்டம், வெல்லவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கம்பஹா மாவட்டம், வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு, எவரிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன நாளை காலை 05 மணி முதல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேலியகொடை பொலிஸ் பிரிவின் மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவின் மேல்குறிப்பிட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் நாளை காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply