அமெரிக்காவில் 128 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மான்ஹாட்டன் நகரில் 128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடம் முழுவதிலும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி பெரும் சேதமடைந்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேசமயம் தீயணைப்பு வீரர்கள் 4 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தேவாலயம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ மற்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டது என்பதால் இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்த சதியா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply