வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை வவுனியாவுக்கு அனுப்ப ஏற்பாடு

வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை இறக்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை உயர் மட்டக்குழுவினரிடம் தாம் இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தபோது அவர்கள் அதற்கு இணங்கியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இக்கப்பலில் உள்ள 800 மெற்றிக்தொன் பொருட்களும் சென்னையில் இறக்கப்பட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களைச் சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிய ‘கப்டன் அலி’ என அழைக்கப்படும் வணங்காமண் கப்பல் கடந்த ஏப்ரல் மாதக் கடைசியில் பிரான்ஸிருந்து புறப்பட்டு மே மாதம் இலங்கையை வந்தடைந்தது.

வணங்காமண் கப்பல் இலங்;கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை கடற்பகுதிக்கு இழுத்துவரப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி திருப்பியனுப்பட்டிருந்த நிலையில் இந்தியக் கடற்ரப்புக்குள் நுழைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply