ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த வழக்கு : சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி

trum

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறது.

இதையடுத்து பல்வேறு மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்பின் பிரசார குழு கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்துள்ளன.

பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக மாவட்ட கோர்ட்டில் டிரம்ப் தரப்பினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை டிரம்ப் தரப்பினர் சரியாக கூறவில்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று டிரம்ப் தரப்பு தெரிவித்தது. அதன்படி பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில் தங்களது வாதங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக பென்சில்வேனியா மாகாணத்தில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளும் தள்ளுபடி செய்தனர். இது டிரம்ப்க்கு மேலும் பின்னடைவாக அமைந்து இருக்கிறது.

ஏற்கனவே சில மாகாணங்களில் டிரம்ப் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 9 நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமிக்கப்பட்டவர்கள். இதனால் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று அவர் நம்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply