மைக்கல் ஜாக்சன் மரணத்துக்கு காரணம் யார்?
மைக்கல் ஜாக்சன் மரணத்துக்கு யார் காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. பொப் இசை உலகின் முடி சூடா மன்னனாக விளங்கிய மைக்கல் ஜாக்சன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் இய ற்கையான மரணம் அடைந்தா ரென்று கூறப்பட்டாலும், அவரது மரணத்துக்கு வேறு சிலரும் காரணமாக இருந்ததாக பரபரப் பான தகவல் வெளியாகியுள்ளது.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவ ரது மரணத்தின் உண் மையான காரணம் தெரிய வரும்.மைக்கல் ஜாக்சன் நடன பயிற்சியின் போது பலமுறை காயமடைந்து உள்ளார். எலும்பு முறிவு, கால் உடைப்பு போன்ற வைகளால் காயம் ஏற்பட்டுள்ளது. அதற் காக அவர் நிறைய வலி மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து நடத்த வேண்டியிருந்த தால், வலியை மறக்க அவர் இந்த மாத் திரைகள் மற்றும் மருந்துக்கு அடிமையா னார். ஆகவே, அவரை நிறைய பணம் சம்பா திக்க வைக்க வேண்டுமென்ற பேராசை யில் அவருடன் இருந்தவர்கள் அதிக அள வில் வலி மாத்திரைகளை சாப்பிட வைத் ததாகவும், இதன் காரணமாக அவர் மர ணத்தை தழுவியதாகவும் மைக்கல் ஜாக் சனின் வக்கீல் பிரயன் ஒக்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
அவரும் அவரது குடும்பத்தினரும் மாதக் கணக்கில் மைக்கல் ஜாக்சனுடன் இருந்து கவனித்து வந்துள்ளனர். அவர்கள்தான் அவரை ஆட்டிப் படைத்துவந்துள்ளனர். வலியில்லாமல், வலியை மறந்து அவர் இசை – நடன நிகழ்ச்சியை நடத்த வேண் டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் அவரது முகாமை யாளர் இந்த வலி மாத்திரைகளை அள வுக்கு அதிகமாக கொடுத்துள்ளதாக அறிகிறேன்.
அவர் என்ன மாத்திரை, மருந்து எடுத் துக் கொண்டார் என்று தெரியவில்லை. அந்த மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன ஆகும் என்றும் எனக்கு தெரியாது. ஆனால், அவர் அளவுக்கு அதிகமான வலி மாத்திரைகளை சாப்பிட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த மாத்திரைகள் ஆபத்தானவை என்று நான் பயப்படுகிறேன்.
மருத்துவ அறிக்கை வந்தால் தான் உண்மை நிலைவரம் தெரிய வரும். இவ்வாறு வக்கீல் பிரயன் ஒக்ஸ்மேன் தெரிவித்தார்.
டொக்டர் மாயம்
இதேவேளை, மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வராத நிலையில், மைக்கல் ஜாக்சனுடன் அவருடைய வீட்டிலேயே தங்கி இருந்த அந்தரங்க டொக்டரும் திடீரென்று மாய மாகிவிட்டதாக, இணையத் தளம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்சன் மரணம் அடைவதற்கு முன்னதாக அவருக்கு அந்த டாக்டர் ஊசி போட்ட தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த ஊசி தான் அவருடைய மரணத்துக்கு காரணமாக அமைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது பற்றி விசா ரணை நடத்துவதற்காக மைக்கல் ஜாக்சனின் டொக்டரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply