8 நிலக்கண்ணி வெடி அகற்றும் குழுவை இலங்கைக்கு அனுப்ப இந்தியா முடிவு

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை யினை ஏற்று எட்டு நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களை அனுப்ப இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இந்தியா 4 நிலக்கண்ணி அகற்றும் பணியாளர்களை இலங்கைக்கு அனுப்ப விருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அதனை அதிகரிக்குமாறு இலங்கை கோரியிருந்தது. இதற் கமைய இந்தியா நிலக்கண்ணி அகற்றும் குழுவை எட்டாக அதிகரித்துள்ளதாக புதுடில்லியில் வைத்து செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இடம் பெயர்ந்துள்ள மக்களை குடியமர் த்துவதற்காக 180 நாட்கள் திட்டம் ஒன்றை தாங்கள் முன்னெடுத்து வருவதாக இலங் கைத் தூதுக்குழு தெரிவித்துள்ளது. இந்தி யாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பல்வேறு சந்திப்புகளை மேற் கொண்டுள்ளனர்.

அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந் தித்த வேளையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் மீள்குடியேற் றப்பட வேண்டிய பிரசேத்தில் நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான தேவை இருக்கிறது. இவ்வாறு அகற்றப்பட்ட பின்னரே அவர்களை மீள குடியமர்த்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடி யதாக இருக்கும் என இலங்கை குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply