12 மாத காலப்பகுதிக்குள் சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்
வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் போது நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் குறித்தும் மிகுந்த கவனம் செலுத்தப்படுமென பொருளாதார அபிவிருத்தி, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இரத்தினபுரியில் அமைந்திருக்கும் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ஷ இதனைக் கூறினார்.
எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் சகல துறைகளையும் மேம்படுத்தி அபிவிருத்தி யுகத்தை ஏற்படுத்தும் வகையில், வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply