கிழக்கு மாகாண சுதந்திர கட்சி அமைப்பாளர்களுக்கான இரண்டாவது ஒன்றுகூடல்: கருணா அம்மான் தலமையில் நடைபெற்றது
கிழக்கு மாகணத்தில் மட்டுமன்றி இலங்கை பூராகவும் மக்கள் மனதில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையின் கீழ் வழி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிழக்குமாகான அமைப்பாளர்களுக்கும் , உறுப்பினர்களுக்குமான இரண்டாவது கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாலை தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் , சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் தலமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
அமைச்சர் வி. முரளிதரன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ் ஒன்று கூடல் நிகழ்வில் சிறீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மற்றும் திருகோணமலை அமைப்பாளர் மார்க்கன், பொலனநறுவ மாவட்ட அமைப்பாளர் மங்களம் மாஸ்டர் , வாகரை பிரதேச அமைப்பாளர் ரியசீலன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், அமைச்சரின் மக்கள் தொடர்பாளருமான ரஞ்சன் மற்றும் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இனியபாரதி , அமைச்சரின் ஊடகசெயலாளர் யூலியன், ஆரையம்பதி அமைப்பாளர் இளங்கீதன் , களுவாஞ்சிகுடி அமைப்பாளர் வீரா, சிறீலங்கா சுதந்திர கட்சியின் மட்டுமாநகர சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் . சிறீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பல்வேறுதரப்பினரை கொண்ட இந்த கலந்துரையாடல் நேற்று மாலை 5 மணியளவில் வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் ஆரம்பமானது. கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்ட இவ் நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவராக கருணா அம்மான் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் முகமாக கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்ட அதே வேளை அனைவரும் இரவு விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர். இதில் முக்கிய விடயமென்னவென்றால் கௌரவ அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் பாடல் ஒன்றுக்கு கிற்றார் இசைக்கருவி வாசித்தமை அனைவரினதும் பாரட்டை பெற்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply