தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 28 பேர் கைது

மேல் மாகாணத்தில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக பொலிஸ் ஊட கப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் தற்போது கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 06 பகுதியில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.

அத்தோடு கொஸ்கமுவ , அவிசாவெல்ல, ருவான் வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் உட்பட 09 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பகுதிகளிலே தங்கி யிருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளிலிருந்து எக்காரணங்களுக்காகவோ உள்நுழையவோ, வெளியேறவோ அனுமதி வழக்கப் படாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 1,927 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1800 நபர் கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply