பொதுமக்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு! - Tamilwin

10 அத்தியாவசிய உணவு பொருட்களை பெப்ரவரி மாதத்தில் இருந்து நிலையான விலையொன்றின் கீழ் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சதொச கூட்டுறவு மற்றும் நியூ சொப் வலையமைப்பு ஊடாக குறித்த உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, அரசி, மாவு, சீனி, பருப்பு, ரின் மீன், நெத்தலி, உப்பு, உருளைக்கிழக்கு, முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகிய 10 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நிலையான விலையின் கீழ் பெற்றுக் கொடுக்கப்படுவுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களிடம் இருந்து உயர்தர பொருட்களை குறைந்த விலைக்கு பெற்று நிலையான விலையின் கீழ் பெப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் 06 மாதங்களுக்கு நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் உரிய விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply