துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் கொலை : ஆண் நண்பர் கைது
துபாயில் அல் பர்சா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று குளியலறைக்கு சென்ற இளம்பெண் அசைவின்றி கிடப்பதாக ஆண் நண்பர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில், துபாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்த போது இளம்பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் ஆண் நண்பரிடம் கேட்டபோது, அவர் ‘‘அந்த பெண் திடீரென பேய் பிடித்தது போல் நடந்துகொண்டார். இதனால் அவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதி பேயை அடித்து ஓட்ட முயற்சித்தேன். அப்போது அவர் மயங்கி விழுந்ததால், உடனே போலீசுக்கு தகவல் அளித்தேன்’’ என்றார்.
ஆனால் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அந்த அறையில் இளம்பெண் கடுமையாக தாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் கிடந்ததற்கான தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆண் நண்பரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
ஆண் நண்பரும், இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண்னை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காகவே அவர் இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பாக ஏமாற்ற முயன்றுள்ளார். மேலும் இளம்பெண்ணை கொலை செய்யும்போது அவர் போதைப்பொருளை உட்கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply