இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியது

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 264 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இதனால் மொத்தபாதிப்பு 1,03,74,932 ஆகவும், பலி எண்ணிக்கை 1,50,114 ஆகவும் உயர்ந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,615, மராட்டியத்தில் 3,160, சத்தீஸ்கரில் 1,021 பேருக்கு தொற்று கண்ட றியப்பட்டுள்ளது.

இதுவரை மராட்டியத்தில் 19,50,171, கர்நாடகாவில் 9,23,353, ஆந்திராவில் 8,83,587, தமிழ்நாட்டில் 8,22,370, கேரளாவில் 7,84,489, டெல்லியில் 6,27,698, உத்தர பிரதேசத்தில் 5,89,611, மேற்குவங்கத்தில் 5,56,384 பேர் அடங்குவர். மற்ற மாநி லங்கள், யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

பலி எண்ணிக்கையையில் மராட்டியத்தில் மட்டும் 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு நேற்று 64 பேர் கொரோனாவால் இறந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,759 ஆக உள்ளது.

கர்நாடகாவில் 12,118, ஆந்திராவில் 7,122, தமிழ்நாட்டில் 12,177, கேரளாவில் 3,185, டெல்லியில் 10,609, உத்தரபிரதேசத்தில் 8,433, மேற்குவங்கத்தில் 9,841, ராஜஸ்தானில் 2,719 , சத்தீஸ்கரில் 3,437, அரியானாவில் 2,927, குஜராத்தில் 4,325, மத்திய பிரதேசத்தில் 3,662, பஞ்சாபில் 5,404 பேர் இறந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 21,314 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 99,97,272 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே புதிய பாதிப்பைவிட தினந்தோறும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்று 1 கோடியை தாண்டிவிடும் என அதிகாரிகள் கூறினர். தற்போது 2,27,546 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply