செட்டிக்குளம் நிவாரண கிராமத்திலிருந்து இரு புலி உறுப்பினர்கள் கைது
வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலிருந்த புலி உறுப்பினர்கள் இருவரை பொலிஸார் நேற்று கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.புலிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய கடிதங்களை இவ்விருவரும் வைத்திருந்ததனாலேயே, புலிகளுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்குமிடையே தொடர்பு இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை வவுனியா கந்தசாமி நகரில் அமைந்துள்ள நிவாரணக் கிராமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. 02 கிரனேற் கைக்குண்டுகள், ஒரு கிலோ கிராம் நிறைகொண்ட இரண்டு குண்டுகள், 22 நிலக்கண்ணி வெடிகள், 33 மீற்றர் நீளமான டெட்டனேட்டர் கோட், 790 – ரி – 56 ரக ரவைகள் ஆகியவற்றை படையினரும் பொலிஸாரும் இணைந்தே இவற்றை கைப்பற்றியிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply