கொரோனா குறித்த ஆய்வா? விஞ்ஞானிகள் குழு தங்கள் நாட்டுக்குள் நுழைய சீனா அனுமதி மறுப்பு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தற்போது 218 நாடுகள்\யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் அதிகமானோருக்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 18 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், தொடக்கத்தில் வௌவ்வாலில் இருந்து கொரோனா பரவியதாக கருத்துக்கள் நிலவின. வௌவாலை உண்ணும் ஒருவகை பாம்பை சீன மக்கள் உணவாக உட்கொண்டு வந்தனர்.

இதனால், கொரோனா வைரஸ் வௌவ்வாலில் இருந்து பாம்பிற்கு பரவி பின்னர் பாம்பில் இருந்து மக்களுக்கு பரவியதாக கருத்துக்கள் நிலவி வருகிறது.

அதேவேளை கொரோனா வைரஸ் வுகான் நகரில் உள்ள ஆய்வகக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும், இந்த வைரசை சீனா வேண்டுமென்றே உருவாக்கி இருக்கலாம் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சுமத்தி வந்தன.

இதனால், வைரஸ் எப்படி உருவானது, இயற்கையாக உருவானதா? அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? அது மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்தது.

இது குறித்து உலக நாடுகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால், விவகாரம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. இதற்காக 10 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவை சீனாவுக்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்த குழு தங்கள் நாட்டுகுள் நுழைய கடந்த மாதம் 16-ம் தேதி சீன அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த குழுவினர் இம்மாத தொடக்கத்தில் சீனா செல்வதாக இருந்தது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. விஞ்ஞானிகள் சீனாவுக்குள் நுழைய தேவையான ஆவணங்களில் ஒன்றான விசா வழங்காமல் அந்நாட்டு அரசு தாமதித்து வருகிறது.

சீனாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு ஒப்புதல் அளிக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகள் குழு சீனாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளதால் வுகான் நகரில் கொரோனா எப்படி உருவானது? வைரஸ் இயற்கையாக உருவானதா? அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவியது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply