20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக வழங்க வேண்டும் : இந்தியாவுக்கு பிரேசில் கோரிக்கை

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இந்தநிலையில் இந்தியா தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 20 லட்சம் டோஸ்களை தங்களுக்கு விரைவாக வழங்கும்படி இந்தியாவிடம் பிரேசில் கோரியுள்ளது.

இது தொடர்பாக பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply