பயங்கரவாதம் முடிந்தது நாட்டை மேம்படுத்த ஒன்றுபடுவோம் பிரித்தானியாவிலுள்ள இலங்கையர்
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்ததன் நிமித்தம் பிரித்தானியாவில் வாழுகின்ற இலங்கையர்கள் அமைதி ஊர்வலமொன்றை நடாத்தியுள்ளனர். இலங்கையர் என்ற அடிப்படையில் தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதல், புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுத்தல், நிதி சேகரிப்பதை தவிர்த்தல் புலிகளுக்கு உதவும் பிரித்தானிய எம்.பிக்களுக்கு அறிவூட்டுதல் என்பனவே இந்த அமைதி ஊர்வலம் நடத்துவதற்கான நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், இலங்கையர் என்ற அடிப்படையில் தாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முடிந்த சகல உதவிகளை நல்குவதற்கு இலங்கையருக்கு அறிவூட்டும் வகையிலான இந்த அமைதி ஊர்வலத்தை பிரித்தானியாவில் உள்ள பயங்கர வாத எதிர்ப்புக்கான இலங்கையரின் கட்டமைப்பு, பிரித் தானியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் நிஹால் ஜயசிங்க மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்தது.
பிரித்தானியாவின் டொடில் வீதியிலுள்ள சென் ஜேம்ஸ் விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்த அமைதி ஊர்வலத்தில் ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட பிரித்தானிய வாழ் இலங்கையர் பங்குபற்றினர்.
இந்த அமைதி ஊர்வலம் நடைபெற்ற அதேநேரம் புலிகளின் ஆதரவாளர்கள் பிரித்தானியாவில் நிதிசேகரிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் பத்தாயிரம் பேரின் கையெழுத்துக்கள் மகஜரொன்று பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுனிடம் கையளிக்க ஏற்பாடாகி இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதிகளாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும், ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சுதத் சில்வாவும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply