தடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்பு தொடரும் : நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை
சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சூறாவளி போல வீசிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் தொற்று அலை.வல்லரசு நாடான அமெரிக்கா கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் முன் திணறிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.25 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பைசர்-பயோன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் போடும் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் கொரோனா பாதிப்புகள் தொடர்வதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோதனைகளின் போது தடுப்பூசிகள் சுமார் 95 சதவீதம் பயனுள்ளதாகக் காட்டப்பட்டன. ஆனாலும் சில தடுப்பூசி போடப்பட்டவர்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு பொதுவாக சில வாரங்கள் ஆகும் என தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply