யுக்ரேனில் லொக் டவுன் இல்லை சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இலங்கை வருவர் : பிரசன்ன

கொரோனா வைரஸ் காரணமாக யுக்ரேன் நாடு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதென சமூல வலைத்தங்களில் பொய்யான செய்தி வௌியிடப்பட்டுள்ளதாகவும் யுக்ரேன் முழுமையாக முடக்கப்படவில்லை என்பதால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அழைத்து வரப்படுவர் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“இங்கிலாந்து மாத்திரமே தற்போது ழுழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர முடியும். 21ம் திகதிக்கு பின்னர் நாம் அனைத்து வகையான விமானங்களுக்கும் அனுமதி அளிக்க உள்ளோம். சுகாதார நடைமுறைகளுடன் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரேன் முழுமையாக லொக்டவுன் செய்யப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் யாரோ அப்படி சொல்லியுள்ளனர். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கூட்டம் நடத்த முடியாது. இதுவே கட்டுப்பாடு. இவ்வாறான நாடுகள் உலகில் பல உள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply