அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது : சவுதி அரேபியா எச்சரிக்கை

லிபியா, ஏமன், லெபனான், துருக்கி, ஆர்மீனியா, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், சோமாலியா, பெலாரஸ், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிரான சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுக்குள் இல்லாத நாடுகளுக்கும் மற்றும் புதிய உருமாறிய தொற்றுகள் பதிவான நாடுகளுக்கும் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அமைச்சகம் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் உள்ள குடிமக்கள் உடனடியாக சவுதி அரேபிய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணிக்க விரும்பும் சவுதி அரேபியர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

பல நாடுகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகள், உறுதியற்ற தன்மை, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் புதிய உருமாறிய வைரஸ் பரவல் ஆகியவற்றின் மத்தியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறாமல் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதாக உள்துறை அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply