பார்க் அன்ட் ரையிட் சிற்றி பஸ் சேவை இன்று ஆரம்பம்
கொழும்பு நகரிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வாக முன்னெடுக்கப்பட்டுள்ள பார்க் அன்ட் ரைட் சிற்றி பஸ் சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது
வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் சேவை, ரயில் பெட்டி மற்றும் மோட்டார் வாகன துறை இராஜாங்க அமைச்சின் வழிநடத்தலின் கீழ் இலங்கை போக்குவரத்து சபை இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய பரீட்சார்த்த செயற்றிட்டமாக இது ஆரம்பிக்கப்படவுள்ளது. கொட்டாவ, மாக்கும்பர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து இந்த பஸ் சேவை ஆரம்பமாகவுள்ளது.
நாளாந்தம் காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பஸ் சேவையில் 64 பஸ் வண்டிகள் இணைந்துக் கொள்ளவுள்ளன. இந்த செயற்றிட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் 200 சொகுசு வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சேவைக்கு சாதாரண பஸ் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாவதுடன், ஆசனங்களின் அளவிற்கு மாத்திரம் பயணிகள் ஏற்றப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply