கொவிட்-19 அபாய வலயங்களிலிருந்து வருவோரை வடக்கில் தனிமைப்படுத்தல் இடைநிறுத்தம் : ஆ.கேதீஸ்வரன்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அதனை இடைநிறுத்துமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால், சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு நேற்று பணிக்கப்பட்டது.
இது தொடர்பில் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா வைரஸ் பரவல் அதிக அபாயம் உள்ளது என தனிமைப்படுத்
தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வருவோவாரை 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை அவசியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவசர அவசியம் ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வரும் நபர்களைச் சுயதனிமைப்படுத்த முடியும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply