திறன்கள் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் : ஜனாதிபதி

புதிய இயல்பு நிலையின் கீழ் உழைப்பின் மகிமையைப் பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷ தெரிவித்தார்.

விரைவான அபிவிருத்திக்காகவும், குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடைய வும் தேசிய கல்வி கொள்கை ஏற்கனவே வகுக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய தினம் நீர்கொழும்பில் உள்ள 16வது பெனடிக்ட் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற பட்டப்படிப்புகளைப் பதிவு செய்வதற்கான ஆரம்ப விழா வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்வியின் தரத்தைச் சிறந்த தரத்திற்கு உயர்த்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் “ஸ்மார்ட் பல் கலைக்கழகங்களாக” மாற்றுவதன் அவசியத்தையும், தொழில்நுட்ப அறிவு நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply