பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்னும் இரண்டு வாரங்களில் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்தார்.

பேக்கரி உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் பாம் ஒயில் மற்றும் மாஜரின் இறக்குமதி வரிகள் அதிகரித்துள்ளதால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் கூறினார்.

பார்ம் ஒயில் ஒரு லீட்டருக்கு 250 ரூபா தீர்வை வரியாக அரசாங்கம் அறவிடுவதாகவும் அதனால் சந்தையில் பார்ட் ஒயில் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மாஜரினுக்கு 400 ரூபா வரி அறவிடுவதால் அதன் விலை 1000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்பதால் விலை உயர்வு தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply