சீனாவில் தயாரான ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
கொரோனா வைரசின் பிறப்பிடமாக சீனாவின் வுகான் நகரம் கருதப்படுகிறது. உலகையே நடுங்க வைக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு ஐஸ்கிரீம் தயாரிப்புக்கான பால் பவுடர் போன்ற மூலப் பொருட்கள் நியூசிலாந்து, உக்ரைன் ஆகிய நடுகளில் இருந்து இறக்குமதி
செய்யப்படுகிறது.
1,812 பெட்டி ஐஸ்கிரீம் தயாரித்து வெளியே அனுப்பி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்கு சீல்
வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றிய 662 தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஐஸ்கிரீம் பெட்டிகள் எங்கெங்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. வாங்கி சென்றவர்கள், சாப்பிட்டவர்கள் யார்-யார் என்பதை தேடி வருகிறார்கள். இது சீனாவில்
மீண்டும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply