ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிக்கை

மீன்பிடித் துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் மேற்கொண்ட முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் போது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் முறைகேடு செய்ததாக ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களின் கைவிரல் அடையாளத்தை பெற்று அவர்களின் முன்னைய குற்றங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஏப்ரல் மாதம் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply