ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியை தொடங்கிய ஈரான்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கு அமெரிக்காவில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ஈரான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கும் நிலையில் ஈரான் இந்த போர்ப்பயிற்சியை தொடங்கி இருக்கிறது.
ராணுவ கமாண்டோ பிரிவுகள் மற்றும் வான் படை காலாட்படை ஆகியவை இந்த போர்ப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. மேலும் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரான் தேசிய ராணுவ தலைவர் அப்துல் ரஹீம் மவ்சாவி இந்த போர்ப்பயிற்சியை மேற்பார்வையிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply