கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் நாடு முழுவதும் பரவல்:அமைச்சர் தயாசிறி ஜயசேகர
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவு நாடு முழுவதும் பரவி உள்ளதாக வைரஸினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனவே பாதிக்கப்படும் அனைவருக்கும் அவர்களது தொடர்பாளர்களுக்கும் அரசாங்கத்தின் தலையீட்டில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறும் கட்டாயம் முகக்சவசம் அணிந்து இடைவௌியை கடைபிடிக்குமாறும் தயாசிறி ஜயசேகர கேட்டுக் கொண்டுள்ளார்.
வௌிநாட்டில் இருந்து நாடு திரும்புவோரை அவர்களது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும் என தயாசிறி ஜயசேகர கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply