பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் : பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் தற்போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட நபர்கள் தங்களின் பி.சி.ஆர். பரிசோதனைக்கான அறிக் கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பது கட்டாயமானது என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரிவுகளுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தலிலிருந்து விடு விக்கப்படும் வரை வீட்டு தனிமைப்படுத்தல் கட்டா யமாகும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங் கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் அறி கையை வருவதற்கு முன்னர் சமூகத்தில் நடமாடு வதால் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது என உபுல் ரோ ஹான சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறித்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர் கள் 10 ஆயிரம் ரூபா அபராத தொகை செலுத்தவேண்டும் அத்தோடு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply