ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு அமைச்சர்கள் இணங்காவிட்டால் பாரிய அழிவு:அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்கள் இணங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாது வெறு நோக்கங்களின் பின் சென்றால் பாரிய அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெற்றி பெற்றே பதவியில் அமர்ந்துள்ளதாகவும் அரசாங்கம் சரியான முடிவு எடுக்கும் போது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மாறாக எதிர்கட்சிகள் தயாரிக்கும் பட்டத்திற்கு பின்னால் செல்லக்கூடாது எனவும் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
தேரர்கள் தலைமை ஏற்று ஜனாதிபதி உள்ளிட்ட எம்மை வழிநடத்துவதை வரவேற்பதாகவும் ஆனால் தேரர்களை சில இடங்களில் சிலர் உசுப்பேத்திவிடுவதாகவும் அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply