பேலியகொடவில் இருந்து அத்துருகிரியவிற்கு அதிவேக நெடுஞ்சாலை

புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையுடன் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் துறைமுக உட்பிரவேச அதிவேக நெடுஞ்சாலை ஊடாக புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சாத்தியவள ஆய்வுக்கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிர்மாணித்து நடாத்திச் சென்று ஒப்படைத்தல் (BOT) எனும் அடிப்படையில் 100% வீதம் வெளிநாட்டு நிதியுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு விண்ணப்பங்களை (RFP) கோருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தெருக்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply