தமிழ் இராணுவப் படையணி உருவாக்கம்: அமைச்சர் கருணா அம்மான்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இராணுவத்தில் தமிழ்ப் படையணியொன்றை உருவாக்கவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறினார். இந்தப் படையணி தொடர்பில் இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு அறிவித்ததாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலி அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இந்தப் புதிய படையணியில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.

“தமிழ் இராணுவப் படையணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 900 பேரில் 600 பேர் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ளனர். எனது அமைப்பின் எஞ்சிய உறுப்பினர்கள் இராணுவ முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் இணைந்துகொள்வார்கள்” என அவர் குறிப்பிட்டார். இவ்வாறு இணைந்துகொண்டவர்களில் சிலர் அப்படையணியின் அதிகாரிகளாக நியமிக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா அம்மான் அந்த அமைப்பிலிருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை உருவாக்கியிருந்தார். எனினும், பிரித்தானியா சென்றிருந்தபோது அங்கு சிறைப்பிடிக்கப்பட்டதால் அதன் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார்.

சிறைத்தண்டனைக் காலம் முடிவடைந்து கருணா அம்மான் மீண்டும் நாட்டுக்கும் திரும்பியதும் கருணா அம்மான் தரப்பினருக்கும், பிள்ளையான் தரப்பினருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த நிலையிலேயே கருணா அம்மான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply