இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புலிகள் படையினரிடம் சரண் : உதய நாணயக்கார

இது வரை 10000 அதிகமான விடுதலைப்புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பொலிசாருக்குக் கிடைக்க பெறும் தகவலைத் தொடர்ந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து பல ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடற் சமரின் போது உபயோகிக்கப்படும் டொபெடோ லோஞ்சர்( டொர்பெடொ லௌன்செர்) ஒன்றையும், இரண்டு டொபெடோஸ் (டொர்பெடொஎச் ) மற்றும் 130 மில்லி மீற்றர் நீளமுடைய 7 எறிகணைகளையும் நேற்றைய தினம் 8 ஆம் படையணியினர் மீட்டுள்ளனர் .டொபெடோஸ் ஒவ்வொன்றும் 26 அடி நீளமும் 7 அங்குல அகலமும் கொண்டவை என பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த மன்னார் மற்றும் வன்னி பகுதிகளில் அமைக்கப்பட்ட காவலரண்களைப் போல கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன .அதன் கீழ் ஒவ்வொரு படை அணியும் உள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply