புலிகளின் தலைவர் பிரபாகரன் ஹிட்லர், முசோலினியை விட மிக மோசமானவர் :இந்திய மத்திய அமைச்சர்

ஹிட்லர்,முசோலினியை விட மிக மோசமானவரே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான அவரைப் பிடித்தால் எம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் கேட்டுள்ளோம். முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முக்கிய நபராக அவரைக் கருதுகிறோம். இவ்வாறு கூறினார் இந்திய மத்திய அமைச்சரான இளங்கோவன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்: விடுதலைப் புலிகளை யார் ஆதரித்துப் பேசினாலும் அவரைக் கைது செய்ய வேண்டும். இந்த விடயத்தில் தமிழக அரசு வேண்டியவர்,வேண்டப்படாதவர் என்று வேறுபாடு காட்டக்கூடாது. திருமாவளவன் புலிகளை ஆதரித்துப் பேசி வருகிறார் ஆனால் அவர் இதுரை கைது செய்யப்பட்வில்லை.பிரபாகரன் இலங்கையின் முக்கிய தமிழ் தலைவர்களைக் கொன்றவர். இவ்வாறு குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply