தனிமைப்படுத்தல் சட்ட மீறல்; இதுவரை 2,751 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றத்திற்காக இதுவரை 2,751பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன,
நேற்று வரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 2,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 2,751 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்று முன்தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயல்பட்ட 15 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுகின்றனவா என்பதை ஆராயும் வகையில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply