மக்கள் பட்டினியில் அரசாங்கம் அதிகார, பணப் பட்டினியில் : எதிர்கட்சித் தலைவர்
நாட்டில் இன்று அநேகமான மக்களின் பிரச்சினை பட்டினி எனவும் ஆனால் அரசாங்கம் அவர்களின் சொந்த பசி மற்றும் அதிகார பசியில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனநாயக விழுமியங்களை மீறி அரசாங்கம் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருவதாகவும் அரச சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் அதன்மூலம் தமது பணத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் கூறினார்.
தனமல்வில – கித்துல்கோட்டே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply