ஜப்பானில் கொரோனா ஊரடங்கை மீறி இரவு விடுதிக்கு சென்ற மந்திரி பதவி நீக்கம்
ஜப்பானில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடவும், விடுதிகள், மதுபான விடுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கவும் உணவகங்களை முன்கூட்டியே மூடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அந்நாட்டு துணைக் கல்வி மந்திரி டெய்டோ டானோஸே, அரசு உத்தரவை மீறி சமீபத்தில் இரவு விடுதிக்குச் சென்றதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்த அந்நாட்டு பிரதமா் யோஷிஹிடே சுகா, அமைச்சரவையிலிருந்து டெய்டோ டானோஸே பதவி நீக்கினார்.
டெய்டோ டானோஸே ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் (எல்டிபி) சோந்தவா். தன்னை பதவிநீக்கம் செய்ததையடுத்து அவா் கட்சியிலும் இருந்தும் விலகி கொண்டார். அவருடன் இரவு விடுதிக்குச் சென்ற மேலும் இரண்டு எல்டிபி எம்.பி.க்களும் கட்சியில் இருந்து விலகி கொண்டார்.
இதேபோல் கடந்த மாதம் அவசர நிலை விதிகளை மீறி இரவு விடுதிக்குச் சென்ற மற்றொரு எம்.பி.யான கியோஹிகோ டொயாமா, அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply