கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க தற்போது தடுப்பூசி மாத்திரமே தீர்வு
கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க தற்போது கொரோனா தடுப்பூசி மாத்திரமே தீர்வு என அரச மருத் துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தடுப்பூசியாகப் பயன்படுத் தப்பட்டு வரும் தடுப்பூசியில் பல சிக்கல்கள் இருந்தாலும், தற் போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி மாத்திரமே தீர்வு என அரசு மருத் துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
உலகில் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் தயா ரிக்கக் குறைந்தது 3 அல்லது 5 வருடங்கள் எடுத்துள்ளது ஆனால் குறித்த தடுப்பூசி தயாரிக்க ஒருவருடம் எடுத் துள்ளது இதனால் மக்களின் பாதுகாப்பது 5 மாதங்களா அல்லது அதற்கு மேல் செல்லுமான என உறுதியாகச் சொல்ல முடியாது என அரசு அரசாங்க மருத்துவ அதிகாரி கள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த தடுப்பூசியில் நன்மை தீமை இரண்டும் உண்டு தற்போது நாட்டின் நிமையைக் கருத்திற் கொ ண்டு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி மாத்திரமே தீர்வு என வைத்தியர் ஹரித அலுத்கே தெரி வித்துள்ளார்.
இருப்பினும், ஏனைய தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது கோவ்ஷீல்ட் தடுப்பூசியிலிருந்து வரும் பக்க விளைவு களின் எண்ணிக்கை மிகக் குறைவு என ஹரித தெரி வித்துள்ளார்.
18 வயதுக்குக் குறைந்தோர்கள் மற்றும் கர்ப்பிணிப் தாய் மார்களுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தப்படமாட்டாது என ஹரித தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply