கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்படவில்லை : சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு கடுமை யான ஒவ்வாமை ஏற்படவில்லை என ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டுத் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக 100,000 க்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், இதுவரை கடுமையான ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாதாரணமாக உடல் வருத்தம் காய்ச்சல். ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply