சதித்திட்டங்கள் மக்களின் சகோதரத்துவத்தால் முறியடிக்கப்படும்:கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியை தேர்லுக்காக தயார்ப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் நாட்டின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது;-

“ஒரு மேடைப்பேச்சு ஆயிரம் கட்டுரைகளுக்கு சமம். ஒரு அடி தடி கலவரம் ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்குசமம்’ என்கிறார் ஹிட்லர். இங்கும் ஹிட்லர் வாரிசுகள் உண்டு.

தேர்தல் சமயத்தில் எப்படியாவது பிற மதத்தவர்களின் உணர்ச்சிகளை துாண்டிமதக் கலவரங்களை உருவாக்கி ஓட்டுகளை அறுவடை செய்யும் முயற்சிகள் இங்கும் நிகழ்கின்றன.

சமத்துவமும் சமூகநீதியும் பேசும் தமிழகத்தில் உங்கள் சதித்திட்டங்கள் என் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Image
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply