விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி
மத்திய அரசை பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-
“டெல்லியை சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் தான் நமக்கு வாழ்வாதாரம் தருகிறார்கள். 2 வருடங்களுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சலுகை இன்னும் நிலுவையில் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். இதற்கு என்ன பொருள்? நீங்கள் சட்டங்களை திரும்ப பெற விரும்புகிறீர்களா? இல்லையா?
இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். விவசாயிகள் போராட்டக் களத்தைவிட்டு விலகிச் செல்லாததால், அவர்களின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும். இறுதியில் அரசாங்கம் தலைவணங்க வேண்டியிருக்கும், அதைவிட இப்போது அதைச் செய்வது நல்லது.”
இவ்வாறு ராகுல் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply