இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ்
இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் இந்திய மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். சிவ்சங்கர் மேனன் ஜூலை 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளதையடுத்தே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்தவர்களில் சிவ்சங்கர் மேனனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீனாவுக்கான இந்தியத் தூதுவராக நிரூபமா ராவ் இருக்கிறார். ஜூலை 31ஆம் திகதி முதல் நிரூபமா ராவ் புதிய பணியை ஏற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply