மடு தேவாலயத்தில் திருவிழா நடத்த இராணுவத்தினர் அனுமதி
புனித மருதமடு திருத்தலத்தின் வருடாந்த திருவிழா உற்சவங்களை நடத்த இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோலகலமாக புனித மருத மடு தேவாலய திருவிழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வன்னி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மன்னார் பிரதி காவல்துறை மா அதிபர் எல்.ஐ.சீ. பெரேரா ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மடுப் பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றியது முதல் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது புனித மருத மடு பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் முடிவடைந்துள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply