2 யுத்தம் நடந்தபோதும் ஆர்.பிரேமதாஸ வௌிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்தார், ஆனால் இன்று
நாட்டில் இரண்டு யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட வௌிநாட்டு முதலீடுகள் பலவற்றை கொண்டுவர முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் இந்த அரசாங்கத்திற்கு அவ்வாறான வேலைத் திட்டம் ஒன்று இல்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் இலங்கை வர வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு இலங்கை மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வர்த்தக கொள்கைகள் விடயத்தில் அரசாங்கம் இன்று எடுக்கும் தீர்மானத்தை நாளை மாற்றிக் கொள்வதனால் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாதுள்ளதென அவர் கூறினார்.
அதனால் சீனாவில் இருந்து விலகும் முதலீட்டாளர்கள், இந்தியா, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு செல்வதாகவும் அவர்களை இலங்கைக்கு கவர்ந்து இழுக்கும் வேலைத் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் சஜித் பிரேமதாஸ கூறினார்.
லுனுகம்வெஹர – அக்போபுர பகுதியில் இடம்பெற்ற எதிர்கட்சித் தலைவர் நடமாடும் சேவை நிகழ்வில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply