தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு
அரசியல் தீர்வு யோசனை குறித்து பல் வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி அரசாங்கத்திலுள்ள கட்சித் தலைவர்களைக் கோரியுள்ளார். பயங் கரவாதத்திற்கு தீர்வு கண்டதைப் போல இந்தப் பிரச்சினைக்கும் தன்னால் தீர்வுகாண முடியும் எனவும் எனவே இதற்காக தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர் கட்சித் தலைவர்களைக் கோரியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநா ட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறிய தாவது:-
13ஆவது திருத்தம் குறித்தும் அரசியல் தீர்வு யோசனை தொடர்பாகவும் கடந்த சில தினங்களாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்த ஜனா திபதி இது குறித்து கட்சிகளுக்கு தெளிவாக எடுத்துரைத் துள்ளார். மஹிந்த சிந்தனையில் அரசியல் தீர்வு யோசனை குறி த்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்வு யோசனை குறித்து சகல தரப்பினருடனும் பேசி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு எடுத்துரைக்கு மாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண் டார்.
அரசியல் தீர்வு தொடர்பில் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சகலரும் ஒன்றாக ஐக்கிய இலங்கையினுள் வாழக் கூடிய தீர்வொன்று வழங்கப்படும். பிரதான பிரச்சினையான பயங்கரவாதப் பிரச்சினை முன்கூட்டியே தீர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரச்சினையான அரசியல் தீர்வு ஏற்ப டுத்தும் பிரச்சினை அவ்வளவு கஷ்டமானதல்ல. 40 வருட அரசியல் அனுபவமுள்ள தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து போதிய தெளிவு உள்ளது. தமிழ் மக்களுக்கும் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வழி வகுக்கப் படும்.
அரசியல் தீர்வு யோசனை குறித்து ஆராய நியமிக்கப் பட்ட சர்வகட்சிக் குழுவின் யோசனை ஒரு மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. அந்த யோசனை குறித்து சகல கட்சிகளுடனும் ஆராயப் படும்.
இது தொடர்பில் பொது இணக்கப்பாடு எட்டப் பட்ட பின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்க ளின் கருத்து பெறப்படும். மக்களின் அங்கீகாரம் கிடைத் தால் யார் எதிர்த்தாலும் அந்த யோசனை அமுல்படுத்தப் படும்.
நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றே முன்வைக்கப்படும். சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப தீர்வு யோசனை முன்வைக்கப்பட மாட்டாது. நாட்டுக்குப் பாதி ப்பு ஏற்படாத வகையிலான தீர்வே முன்வைக்கப்படும். அரசியல் தீர்வு யோசனை தொடர்பாக எத்தகைய இண க்கப்பாடு வந்தாலும் அதனை முதலில் மக்களின் இணக் கப்பாட்டுக்காக முன்வைக்கப்படும். 13ஆவது திருத்தச் சட் டத்தை அதே போல நிறைவேற்றுவதா அல்லது அதனை விட கூடுதல் அதிகாரம் வழங்குவதா என்பது குறித்து இது வரை கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வதானால் அதனை விட சிறந்த தீர்வொன்று மாற்அடாக இருக்க வேண்டும்.
நாட்டுக்குப் பாதிப்பான எந்தத் தீர்வையும் முன்வைக் கப்போவதில்லை என ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார். ஐ.தே.க.வில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்த எம்.பி. க்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், சகல எம். பி.க்களும் சு.க. அமைப்பாளர் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறினார். அமைச்சர் மிலிந்த மொரகொட அமைப்பாளர் பதவி ஏற்கவில்லை எனவும் சகலரும் எதிர்வரும் தேர்த லில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட உள்ளதா கவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply